தமிழ்நாடு

இந்த ஆண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்: முழு தகவல்!

Published

on

10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த அட்டவணையை சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் எத்தனை என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது என்பதும் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்பதும் தேர்வு முடிவு ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை தேர்வுகள் நடைபெறும் என்பதும் ஜூன் 23ஆம் தேதி தேர்வு முடிவு வெளி வரும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு செல்பவர்களுக்கு 23 நாட்களும், 12ஆம் வகுப்பு செல்பவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் 2022-23 ஆண்டு கல்வியாண்டு 11ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்பதும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒன்றாம் மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டின் வேலை கடைசி வேலை நாள் மே 13ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version