தமிழ்நாடு

‘ஒன்றிய அரசு இல்ல, மத்திய அரசுனு சொல்லுங்க’- BBCக்கு அட்வைஸ் பண்ணி பல்பு வாங்கிய சுமந்த் ராமன்

Published

on

தன்னை அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர் சுமந்த் சி.ராமன். பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் அவர், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் வகையாக வந்து சிக்கியுள்ளார். 

பிபிசி தமிழ் இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் கட்சி பாகுபாடின்றி தங்களின் எதிரணியில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த கட்சியினரை இந்த உளவுத் துறை முகமைகளைப் பயன்படுத்தி வேவு பார்த்திருக்கிறார்கள் என்கிறது வரலாறுஎன்று ஒரு பதிவை இட்டிருந்தார்கள். 

இதை எதிர்க்கும் வகையில், ‘பிபிசி நியூஸ், எதற்கு உங்கள் தமிழ் டீம் ஒன்றிய அரசு என்று கூறி ஒரு சாரர் பக்கம் சாய்கிறார்கள். சில மாதங்கள் முன்பு வரை அவர்கள் எப்படி அழைத்தார்கள் என்பதை கவனியுங்கள். இது குறித்து உங்களின் அணியினருக்குச் சொல்லிப் புரிய வையுங்கள்என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்ராஜன், ‘தவறாகவே சொல்லி வருவதை ஒரு கட்டத்தில் சரியாக சொல்லிப் பழக வேண்டும். அதைத் தான் அறிவு படைத்த யாவரும் செய்வா்கள். உண்மையான கேள்வி, பிபிசி தமிழ் இணையதளம், ஏன் இவ்வளவு நாட்கள் அவர்கள் ஒன்றிய அரசு என்று அழைக்கவில்லை என்று இருக்க வேண்டும். அது தானே அரசியல் சட்ட சாசனப்படி சரிஎன்று பதிலடி கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version