சினிமா செய்திகள்

வெளியாவதற்கு முன்னரே லாபம் ஈட்டிய ‘சுல்தான்’- எத்தனை கோடி தெரியுமா?

Published

on

கார்த்தி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த மசாலா படமாக நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது சுல்தான். இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா நடிக்கிறார். அவர் நடித்து வெளிவரும் முதல் தமிழ்ப் படம் இது தான். இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தை இயக்கினார். ரெமோ போலவே இந்தப் படமும் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் எனத் தெரிகிறது.

சுல்தான் படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

இந்த படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளாராம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இந்நிலையில் இந்த படத்தை மொத்தமாக 40 கோடி ரூபாய்க்கு எடுத்து, அதை இதுவரைக்கும் 67 கோடி ரூபாய்க்கு மார்க்கெட் செய்துள்ளாராம் எஸ்.ஆர்.பிரபு. இதன் மூலம் ரிலீஸூக்கு முன்னரே 27 கோடி ரூபாய் அளவுக்கு ‘சுல்தான்’க்கு லாபம் கிடைத்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version