சினிமா செய்திகள்
’சுல்தான்’ மூன்றாவது சிங்கிள் பாடல் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சுல்தான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’எப்படி இருந்த நாங்க’ என்று தொடங்கும் என்ற மூன்றாவது பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். விவேகா பாடிய இந்த பாடலை விவேக்-மெர்வின் கம்போஸ் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலும் ஏற்கனவே வெளியான 2 பாடல் போல் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரீம் வாரியர் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் குறித்த் வீடியோ ஒன்றை ட்ரீம்வாரியர் நிறுவனம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.
#EppadiIrunthaNaanga
“எப்படி இருந்த நாங்க” #Sulthan3rdSingle from Today 5.30pm.Sung by: Anthony Daasan
Lyrics: Viveka
A Vivek – Mervin Musical #Sulthan #சுல்தான் #Sulthan3rdSingleFromToday @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k @iamviveksiva @MervinJSolomon pic.twitter.com/Yr72zszwUF— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 15, 2021