சினிமா செய்திகள்

சுல்தான்’ ரிலீஸ் தேதியில் மாற்றமா?

Published

on

கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சுல்தான் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவ காரணமாக சுல்தான் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க எனது நண்பர்கள் கூறினார்கள். மேலும் தேர்தலை காரணம் காட்டியும் ஒத்திவைக்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். திட்டமிட்டபடி உலகமெங்கும் திரையரங்குகளில் ஏப்ரல் 2ஆம் தேதி சுல்தான் திரைப்படம் வெளியாகும்.

ஆனால் அதே நேரத்தில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து படத்தை பார்த்து என்ஜாய் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version