உலகம்

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பு!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தாலிபான் அமைப்பை எச்சரிக்கை செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் உள்பட மற்ற நாட்டினர்களை பத்திரமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க படைகள் இன்னும் முழுமையாக வெளியேற வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே அமெரிக்க படைகளுக்கு தீவிரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நேற்று இரவு காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளும் காபுலில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே 2 வெடிகுண்டுகளும் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதாகவும், அதில் ஒருவர் கடற்படை மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்பதும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த போதிலும் பொது மக்களை வெளியேற்றும் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஐஎஸ்ஐஎஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் காபூலில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன என்பதும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version