தமிழ்நாடு

கமல்ஹாசனுக்காக கோவையில் பிரச்சாரம் செய்யும் ஒரே நடிகை இவர்தான்: அதுவும் ஏன் தெரியுமா?

Published

on

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவைகள் செய்தவர் கமல்ஹாசன் என்பதும் தமிழ் திரையுலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர் என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு அவர் குருவாக இருந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் அரசியல் கட்சி தொடங்கி களத்தில் இருக்கும் நிலையில் ஒரு நடிகர் நடிகை கூட அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வராதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சியில் உள்ள நடிகர் நடிகைகள் தவிர நடுநிலையில் உள்ள நடிகர் நடிகைகள் யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதும் கசப்பான உண்மையாக உள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோவையில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் பிரச்சாரம் செய்து வரும் ஒரே நடிகை சுகாசினி என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் அண்ணன் மகளான சுகாசினி தனது சித்தப்பாவின் வெற்றிக்காக கையில் டார்ச் லைட் உடன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும் கமல்ஹாசனுடன் கூட ஒரு சில நேரங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சுகாசினி இதுவரை எந்தவிதமான அரசியல் கருத்தையும் பொதுவெளியில் தெரிவித்தது இல்லை என்பதும் அவரது கணவர் மணிரத்னம் கூட அரசியல் கருத்துக்களை தெரிவித்தது இல்லை என்றும் என்பதும் ஆனால் தற்போது கமல்ஹாசனுக்காக அவர் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version