தமிழ்நாடு

ரூ.10 கோடி செலுத்தினால் சுதாகரனும் விடுதலை – பெங்களூரு தனி நீதிமன்றம்

Published

on

10 கோடி ரூபாய் செலுத்தினால் சுதாகரனும் உடனே விடுதலையாகலாம் என்று பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய தோழி சசிகலாவும், சுதாகரனும் பெங்களூரு பரப்பன சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். சசிகலா அபராதத் தொகையை செலுத்தி விட்டதால் வரும் ஜனவரி மாதம் விடுதலையாகிறார்.

இந்த நிலையில், 10 கோடி ரூபாய் செலுத்தினால் சுதாகரனும் உடனே விடுதலையாகலாம் என்று பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சசிகலாவின் விடுதலையொட்டி பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழக்கமாக மற்ற கைதிகளை இரவு 7.00 மணிக்கு விடுதலை செய்வார்கள். ஆனால், சசிகலாவை இரவு 9,30 மணிக்கு விடுதலை செய்யும்படி அறிவுறுத்தல் வழஙக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version