தமிழ்நாடு

அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர்: வழக்கு தொடர்ந்தார் சுப்பிரமணியன் சுவாமி!

Published

on

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு சமீபத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது என்பதும் அதன்படியே அர்ச்சகர்கள் சிலர் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மசோதாவிற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது என்பதும் அவைகளில் அதிமுகவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் சிலர் மட்டும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என பாஜக தலைவர்கள் தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திமுக அரசின் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி அவர்கள் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கை அவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்வாரா? அல்லது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்வாரா? என்ற கேள்விகள் எழுந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அரசு கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உதவியாளர் மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாகவும் இந்த மனு விசாரணைக்கு வரும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version