இந்தியா

சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என முட்டாள்கள் கூறுகின்றனர்: சுப்பிரமணியன் சுவாமி

Published

on

சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என சில முட்டாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என்றும் யாராலும் இனி சேது சமுத்திர திட்டத்தை தொட முடியாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார் .

காஞ்சிபுரத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது சேதுசமுத்திர திட்டம் தொடர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது:

சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. ஏனெனில், அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன். இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள். யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிந்துவிட்டது’ என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார் .

 

seithichurul

Trending

Exit mobile version