இந்தியா

வைகோவுக்கு ஓடிச்சென்று வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி!

Published

on

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் நாளை மாநிலங்களவையில் பதவியேற்க உள்ளார்கள். அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கியமான ஒருவர்.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள வைகோவுக்கு நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்றபோது உற்சாக வரவேற்பு கொடுத்தனர் மதிமுக தொண்டர்கள். வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவிபிரமாணம் செய்து வைக்க கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதிய பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் வைகோவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த அரிதான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் வைகோவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் வைகோவை ஓடிச் சென்று சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவரும் என்னை பாராட்டும் விதமாக சில விஷயங்களை ஊடகத்தினரிடம் கூறினார். ஜனநாயகத்தில் மரியாதை என்பது மிகவும் அவசியமானது என பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version