கிரிக்கெட்

இளம் வயதில் இரட்டை சதம்.. குறுகிய நாட்களில் 1000 ரன்கள்: சுப்மன் கில் அடுத்தடுத்து சாதனை!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்துஅணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. இந்தியாவின் நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்ட போதிலும் தனி ஆளாக சுப்மன் கில் அபாரமாக விளையாடினார் என்பதும் அவர் இந்த போட்டியில் இரட்டைச் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

208 ரன்கள் எடுத்த சுப்மன் கில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை அடித்து உள்ளார் என்பதும் குறிப்பாக 194 ரன்கள் என்று இருந்த நிலையில் ஒரு சிக்சர் அடித்து தனது இரட்டைச் சதத்தை அவர் பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை ஐந்து பேட்ஸ்மேன்கள் இரட்டைச் சதம் அடித்த நிலையில் ஆறாவது பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து உள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, இசான் கிஷான் ஆகியோர் இரட்டைச் சதம் அடித்துள்ளனர். அதிகபட்சமாக ரோகித் சர்மா 264 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளம் வயதிலேயே ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் கடந்த 11 போட்டிகளில் சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடியுள்ளார் என்பதும் கடந்த 15ஆம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அவர் 116 ரன்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் 349 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 350 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. சற்றுமுன் அந்த அணி நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version