இந்தியா

‘இது யாருக்கு நீங்கள் தரும் ஆறுதல்…’- நிதியமைச்சர் நிர்மலாவை விளாசும் தமிழக எம்.பி

Published

on

கொரோனா செலவினம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

கோவிட் செலவினத்தை எதிர் கொள்ள வரி உயர்வு இருக்காது. இது நிதியமைச்சர் வார்த்தைகள். இன்றைய வணிக இதழ்களில் தலைப்பு செய்தி.

இது சாமானிய, நடுத்தர மக்களுக்கான ஆறுதலா? அவர்கள் முதுகில் எங்கே இடம் இருக்கிறது மேடம் இனி மேலும் சுமைகளை ஏற்றுவதற்கு… ஒரு லிட்டர் பெட்ரோலில் மட்டுமே 30 ரூபா உங்க கஜானாவுக்கு வருகிறதே.. போதாதா!

மே, ஜூன் மாதங்களில் மட்டும் 24 முறை பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கிறதே… போதாதா? பெட்ரோல் விலைகள் உயரும் போதெல்லாம் உங்கள் கஜானாவுக்கு வருகிற வரிகளும் கூடுகிறதே… போதாதா?

சமையல் எரி வாயு ஒரு ஆண்டில் 200 ரூபா கூடியிருக்கிறதே… போதாதா!
அப்படி எனில் இந்த ஆறுதல் யாருக்காக? கோவிட் செலவினத்தை எதிர்கொள்ள கார்ப்பரேட் வரிகளை உயர்த்து… செல்வ வரியை போடு… வாரிசுரிமை வரி கொண்டு வா… சூப்பர் ரிச் வரி தீட்டு.. என்று இடதுசாரிகள் குர‌ல் கொடுக்கிறார்கள் அல்லவா! அதற்காக அம்பானிக்கும் அதானிக்கும் நிதியமைச்சர் தருகிற ஆறுதல் இது.

இது பிரதமரின் ஆணையாம். இது யாருக்கு நீங்கள் தரும் ஆறுதல் நிதியமைச்சரே…’ என நிதியமைச்சரின் அறிவிப்பையொட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version