தமிழ்நாடு

செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்ட அண்ணா பல்கலை: என்ன காரணம்?

Published

on

செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதிய 10,000 மாணவர்கள் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ததாகவும், அந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வின் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன .

இதனை அடுத்து இந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடவும் அவர்களது விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டாமென அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது என்றும், உரிய அவகாசம் வழங்கியும், விடைத்தாள்களை சரியான நேரத்திற்குள் மாணவர்கள் பதிவு செய்யவில்லை என்றும் அதனால் அந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிட்டு தான் முடிவுகள் வெளியாகும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version