உலகம்

மோடிக்கு வங்கதேசத்திலும் எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு!

Published

on

பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ’கோபேக் மோடி’ என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக எதிர்க்கட்சிகள் ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி வங்கதேசத்துக்கு சென்ற நிலையில் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்தின் 50 ஆவது தேசிய தின விழா கொண்டாட்டங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில் இன்று பிரதமர் மோடி வங்கதேச சுற்றுப்பயணம் சென்றார்.

இந்த நிலையில் வங்கதேசத்திற்கு பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உட்பட சிலர் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் சில மணி நேரங்களில் வன்முறையாக மாறியது என்பதும் இதில் 40 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போராட்டம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவினரும் மோடியின் வருகைக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குழுவினரும் மோதிக் கொண்டதால் இந்த மோதல் வன்முறையாக மாறி விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version