தமிழ்நாடு

இருசக்கர வாகனங்களுக்கு தடை: தமிழக அரசின் அதிரடி உத்தரவு

Published

on

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தடை என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இயக்க அனுமதி இல்லை என்பது தெரிந்ததே. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என்றும் லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்க உரிமையுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர் வாகனங்களில் வருவதாக தகவல் வந்ததையடுத்து இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version