தமிழ்நாடு

தேர்வை விட ஹிஜாப் தான் முக்கியம்: தேர்வு எழுதாமல் திரும்பி சென்ற மாணவி!

Published

on

ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவர் பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால் தேர்வை கூட எழுதாமல் திரும்பிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்களை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவர் தனக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்காததால் தேர்வு எழுதாமல் அவர் திரும்பி சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் பல மாணவிகள் பள்ளி வாசல் வரை ஹிஜாப் அணிந்து விட்டு அதன் பின் ஹிஜாப்பை எடுத்து உள்ளே வைத்துவிட்டு பள்ளிகளுக்குச் சென்று தேர்வு எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version