தமிழ்நாடு

அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 உறுப்புக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!

Published

on

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆக இருந்த 27 கல்லூரிகள் அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவுப்படி 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிளாக மாற்றப்பட்டது. இதுகுறித்து அரசாணையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அரசாணையில் 27 கல்லூரிகளும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்றும் அந்த கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய செலவின தொகையை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆன்லைன் சேர்க்கை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள் ஆக மாற்றப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆன்லைனில் மாணவர்களை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற அரசு கல்லூரிகளை போன்ற 27 கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை நடைபெற பின்பற்றப்படும் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version