கிரிக்கெட்

INDvENG – ஜோ ரூட்டுக்காக ஓடி வந்து உதவிய கோலி… இதை போய் கேலி செஞ்சுட்டாரே ஸ்டுவர்ட் பிராட்!!!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாளன்று இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு உதவிய ஒரு வீடியோ பலரது பாராட்டுகளைப் பெற்றது. அதை கேலி செய்யும் வகையில் ஸ்டுவர்ட் பிராட் கூறிய கருத்து ஒன்று தற்போது சர்ச்சையாகி வருகிறது.

போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். மெலும் டோம் சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே 87 மற்றும் 82 ரன்கள் குவித்தனர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து, 555 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யும் எனத் தெரிகிறது.

 

சென்னை பிட்ச், பேட்டிங் செய்ய ஏதுவாக உள்ளது. இதனால் இந்தப் போட்டி எப்படியும் டிராவில் தான் முடியும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி வீரர்கள் இன்று, வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆட்டம் டிராவை நோக்கிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் போட்டியன்று, வெகு நேரம் களத்தில் இருந்து விளையாடி ஜோ ரூட்டுக்கு, திடீரென்று காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல், கீழே படுத்து துடித்தார். இதைப் பார்த்த கேப்டன் விராட் கோலி, ஓடோடி வந்து ரூட்டின் காலைப் பிடித்தார். அவரின் தசைப் பிடிப்பைப் போக்கும் வகையில் செயல்பட்டார். கோலியின் இந்த மனிதாபிமான செய்கையைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, வீடியோவுடன் ஒரு ட்வீட் பதிவிட்டது.

இதற்கு கீழே வந்து கமென்ட் செய்த இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், ‘நானும் இந்தப் போட்டியில் டிரிங்க்ஸ் எடுத்துக் கொண்டு ஓடினேன். என்னையும் பாராட்டி விருது கொடுப்பீர்களா?’ என நக்கல் கலந்த தொனியில் கேள்வி எழுப்பினார். இது தற்போது சர்ச்சையாக வெடித்து வருகிறது.

 

 

Trending

Exit mobile version