சினிமா

ஸ்டிரைக்கர் படத்தின் காப்பியா வடசென்னை?

Published

on

வடசென்னை படம் தன்னுடைய நடிப்பில் வெளியான ஸ்டிரைக்கர் படத்தை விட மிகவும் பெரியதாக இருக்கும் என நடிகர் சித்தார்த் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.

வடசென்னை மக்களின் 30 ஆண்டுகால வாழ்க்கையை 3 பாகமாக எடுத்துள்ளதாகவும், அதன் முதல் பாகத்தை நாளை ரிலீஸ் செய்யவும் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரம் ஆடும் பையன் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறான் எனும் அதே வடசென்னையின் கதையை மையமாக வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்னர், பாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஸ்டிரைக்கர் படத்தில் தான் நடித்ததாகவும், ஆனால், வெற்றிமாறன் அதை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருப்பார் என நடிகர் சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.

இந்த ட்வீட்டால், வடசென்னை படம் புதிய கதையல்ல, அதை பத்து வருஷத்துக்கு முன்னாடியே நான் நடிச்சுட்டேன். இப்போ அந்த கதையை காப்பி அடித்து தான் வெற்றிமாறன் செய்துள்ளார் என வஞ்சபுகழ்ச்சி அணியோடு சித்தார்த் பதிவிட்டுள்ளதாகவே பலரும் கருதுகின்றனர்.

மேலும், படத்தின் பாடல் காட்சி ஒன்றையும் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அது போன்றே வடசென்னையிலும் இருக்கிறதா என தெரியவில்லை. என்ன சித்தார்த் ப்ளூ சட்டை மாறன முந்திட்டீங்களே!

 

seithichurul

Trending

Exit mobile version