தமிழ்நாடு

பொன்னாருக்கு சபரிமலையில் அவமரியாதை: குமரியை ஸ்தம்பிக்க வைக்கும் பாஜக!

Published

on

தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பாஜகவை சேர்ந்த இவர் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது கேரள காவல்துறையை சேர்ந்த எஸ்பி ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது சொந்த காரில் செல்ல அனுமதி மறுத்தார். இதனையடுத்து அமைச்சர் மற்றும் அவருடன் சென்ற பாஜகவினர் அந்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் எவ்வளவு எடுத்துக்கூறியும் அந்த அதிகாரி அவரை தனது சொந்த காரில் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் பக்தர்கள் செல்லும் அரசு பேருந்தில் சென்று ஐய்யப்பனை வழிபட்டுவிட்டு வந்தார். அப்போது அவர் அழுதுகொண்டே ஐயப்பனை வணங்கினார். இந்த சம்பவம் பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கேரளாவில் நடந்த சம்பவத்துக்கு தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை முதல் பஸ்களில் கல்லெறி சம்பவங்களில் பாஜகவினர் ஈடுபட்டனர். முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் கடைகள் திறக்கக்கூடாது, கடைகள் திறக்க கூடாது என வலியுறுத்தியும், துண்டு நோட்டீஸ் கொடுத்தும் பாஜகவினர் குமரியை ஸ்தம்பிக்க விட்டுள்ளனர். இன்று காலை மூதலே பேருந்துகள் ஓடாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களால் செல்ல முடியவில்லை.

மேலும் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் இன்று நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பாஜகவினரின் இந்த செயல்பாடு குமரியில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version