தமிழ்நாடு

தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவேன்.. புதிய தலைவர் கே.எஸ். அழகிரி உறுதி!

Published

on

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது.

அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக வசந்தகுமார் நியமனம் மயூரா ஜெயக்குமார், விஷ்ணுப பிரசாத், ஜெயக்குமார் ஆகியோரும் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். லோக் சபா தேர்தலை முன்னிட்டு நடந்து இருக்கும் இந்த அதிரடி மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரசின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி அளித்துள்ள பேட்டியில், என்னுடைய நோக்கம் எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் உயர்ந்த கொள்கைகளான மதசார்பற்ற கொள்கை, மதங்களுக்கும் சாதிகளுக்கும் அப்பாற்பட்ட கொள்கை ஆகியவற்றை நிலைநிறுத்த பாடுபடுவேன்.

ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் கட்சியின் சோஷலிச கொள்கை. தீண்டாமைக்கு எதிரான கொள்கை, பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்தும் ஜனநாயக கொள்கை ஆகிய கொள்கைகளை எப்போதும் காப்பேன். என் பதவிக்காலத்தில் இதற்காக குரல் கொடுப்பேன்.

seithichurul

Trending

Exit mobile version