வீடியோ

சிம்பு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய தனுஷ்!

Published

on

நடிகர் சிம்புவின் 36வது பிறந்த நாள் விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர்களில், சிம்புவின் ரசிகர்கள் கேக் வெட்டியும், கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சிம்புவின் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு நடிகர்கள் தனுஷ், ஜெயம்ரவி, மகத் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கும், நடிகைகள் யஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.

எஸ்.டி.ஆர். என்று க்ரீடத்துடன் எழுதப்பட்ட கேக்கை சிம்பு வெட்டி, நடிகர் தனுஷுக்கு ஊட்டினார்.

சிம்புவுக்கு தனுஷ், ஜெயம் ரவி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தினார்.

seithichurul

Trending

Exit mobile version