சினிமா செய்திகள்

தயாராகும் போடா போடி-2… சிம்புவுக்கு ஜோடியாக ஹிந்தி பட நாயகி..!

Published

on

நடிகர் சிலம்பரசன் விரைவில் போடா போடி 2 திரைப்பட படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான படம் போடா போடி. 2012-ம் ஆண்டு வெளியான இப்படத்தை தயாரித்த படம் குமார் தற்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மீண்டும் விக்னேஷ் சிவன்தான் இயக்குவாரா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

ஆனால், சிம்பு தன்னுடைய மாநாடு, ஈஸ்வரன் படங்கள் வெளியீட்டுக்குத் தயாரானதும் போடா போடி 2-வில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் ரித்திகா பால் என்னும் ஹிந்தி பட நாயகி முதன்முறையாகத் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். போடா போடி 2-க்காகப் பயிற்சியும் எடுத்துக் கொண்டு வருகிறாராம். இசை முதல் பாகத்தைப் போலவே தரண் குமார் இசைதான் என்பதையும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version