சினிமா செய்திகள்

சிம்புவின் ‘மாநாடு’… ரசிகர்களை உற்சாகப்படுத்திய புதிய அப்டேட்..!

Published

on

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு படக்குழுவினர் ஒரு சூப்பர் அப்டேட் வழங்கி உள்ளனர்.

சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு அரசியல் பேசும் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புத்தாண்டு தினமான இன்று மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அப்டேட் வழங்கி உள்ளார். அதாவது வருகிற பொங்கல் பண்டிகையின் அன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.டி.ஆர் பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி அன்று மாநாடு ஆடியோ ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version