சினிமா செய்திகள்

ஆடியோ வெளியீட்டுக்குத் தயாரான ‘ஈஸ்வரன்’- சிம்பு கொடுக்கும் சர்ப்ரைஸ்!

Published

on

வருகிற புத்தாண்டுக்கு நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு உள்ளது.

எஸ்டிஆர் நீண்ட இடைவெளிக்குப் பின் பெரும் எதிர்பார்ப்பை ஈஸ்வரன் திரைப்படம் மூலம் ஏற்படுத்தி உள்ளார். ஈஸ்வரன் திரைப்படத்தில் முதன் முறையாக சிம்பு தனது புதிய ஸ்லிம் தோற்றத்தில் கலக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சுசூந்திரன் இயக்கி உள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்துக்குப் போட்டியாக ஈஸ்வரன் வருகிற பொங்கலுக்குத் திரைக்கு வரத் தயாராக உள்ளது. அதற்கு முன்னர் ஈஸ்வரன் திரைப்படத்தின் ஆடியோ வருகிற ஜனவரி 2-ம் தேதி வெளியிடப் பட உள்ளது. சிம்பு, பாரதிராஜா ஆகியோருடன் நித்தி அகர்வால், நந்திதா ஸ்வேதா, முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்துக்கு இசை அமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாடல் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version