சினிமா செய்திகள்

டான் ஆக சிம்பு… போலீஸாக கெளதம் கார்த்திக்..!- புது கூட்டணியில் ஒரு ஆக்‌ஷன் ஹிட் தயார்!

Published

on

புதிதாக சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்துக்கான பெயர் நாளை வெளியாக உள்ளது.

சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லார் ஆக இந்தப் படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வழங்குகிறார்.

கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனையைச் செய்த படம் ‘மஃப்டி’. ஒரு டானுக்கு போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் தான் மஃப்டி. இந்தத் திரைப்படத்தின் ரீமேக் ஆக சிம்பு- மற்றும் கெளதம் கார்த்திக் படம் வெளியாக உள்ளது. நாளை இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version