சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் புதிய அப்டேட்: மாறுகிறது டைட்டில்!

Published

on

நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டைட்டில் போஸ்டர் மற்றும் ஒருசில போஸ்டர்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மதியம் 12.15 மணிக்கு இந்த படத்தின் புதிய டைட்டில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ’நதிகளிலே நீராடும் சூரியன்’ டைட்டில் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டைட்டில் மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளில் ஒன்றை இயக்குனர் கௌதம் மேனன் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவருடைய ஒவ்வொரு படத்தின் டைட்டில்களும் கவிதை போல் இருக்கும் என்ற நிலையில் தற்போது அவர் பாரதியின் கவிதை வரியை தனது படத்தின் டைட்டிலாக பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக ஏற்கனவே நான்கு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இன்றைய டைட்டில் போஸ்டரில் அவரது பெயர் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version