தமிழ்நாடு

சென்னையில் சிலமணி நேரத்தில் பலத்த காற்று, 7 மாவட்டங்களுக்கு கனமழை: எச்சரிக்கை அறிவிப்பு

Published

on

சென்னையில் அடுத்த சில மணி நேரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டுமின்றி 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ய இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு இன்னும் சில மணிநேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு சென்னை அருகே கரையைக் கடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக சென்னையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அதுமட்டுமின்றி 7 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டதாகவும் திநகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்ததாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version