தமிழ்நாடு

மதுரை கோவிலில் திருடப்பட்ட சிலைகள் முட்புதரில் மீட்பு.!

Published

on

நிலக்கோட்டை: மதுரை மாவட்டம், சோழவந்தானை ஒட்டியுள்ள குருவித்துறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற  சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவில் மிகவும் பழமையான பாரம்பரிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் 14 ஆம் தேதி, கோவில் இல் வைக்கப்பட்டிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது. காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்து தருமாறு  காட்டுப்பட்டி காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் புகார் அளித்தது.

சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் உள்ள உருவங்களை வைத்து போலீஸ் விசாரணையை துவங்கியது. ஆனால் நேற்று எதிரிபரத விதமாக வாகனத்தில் சென்ற ஒருவர் கல்யாணி பட்டி பகுதியில் உள்ள முட்புதரில் திருடப்பட்ட சிலைகள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைத்து வந்த காவல்துறை, திருடப்பட்ட சிலைகள் மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். சிலைகளை திருடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version