கிரிக்கெட்
கோஹ்லி ஒரு சூப்பர்ஸ்டார்.. சாதனைகளை முறியடிக்க பிறந்தவர்.. சொல்வது யார் தெரியுமா?
லண்டன்: இந்திய கேப்டன் கோஹ்லி, கிரிக்கெட் உலகில் எல்லா சாதனைகளையும் முறியடிக்க பிறந்தவர் என்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டிற்கு 287 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 10 விக்கெட்டிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது அதை எடுக்க இந்தியா தீவிரமாக விளையாடி வருகிறது.
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் கோஹ்லி மொத்தம் 149 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார்.
அவர் இந்திய அணியில் மற்ற எல்லா வீரர்கள் அடித்து இருக்கும் ரன்னை விட அதிக ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டிவ் வாக்ஸ் அவரை பாராட்டி இருக்கிறார்.
அவர் தனது இன்ஸ்டகிராம் போஸ்டில், ”கோஹ்லி ஒரு அகில் உலக சூப்பர் ஸ்டார். அவர் கிரிக்கெட் உலகில் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார்” என்றுள்ளார்.