தமிழ்நாடு

‘ஸ்டெர்லைட் மூடியது, மூடியதுதான்…’- கனிமொழி திட்டவட்டம்

Published

on

கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தில் ஆலைத் திறக்கப்பட்டது.

பல்வேறு பிரச்சனைகளால் சென்ற அதிமுக அரசில் மூடப்பட்ட இந்த ஆலையைத் திறந்ததற்குப் பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் திமுக அரசு தற்காலிக அனுமதி கொடுத்தது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும் காரணத்தினால், சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை இனியும் திறந்திருக்கத் தேவையில்லை என்று கூறியது.

அதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக கூறியது.

இந்நிலையில் திமுகவின் மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ‘திமுகவின் கருத்து தான் எங்களின் கருத்தும். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்குத் தந்த வாக்குறுதி என்னவென்றால் ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்றார். அதைக் கட்டாயம் கடைபிடிப்போம்.

கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் தேவையைக் கருதி தான் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தோம். இனி அது திறக்கப்படாது’ என்றார்.

Trending

Exit mobile version