இந்தியா

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்: மத்திய அரசு கருத்து

Published

on

நாடு முழுவதும் கொரனோ நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை சமீபத்தில் தமிழக அரசு உத்தரவால் மூடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம் என ஸ்டெர்லைட் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்றும் அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க நீதிமன்றத்தால் அனுமதி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version