தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் கேவியட் மனு!

Published

on

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு போதுமான மின்சார வசதி வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் மனுதாக்கல் செய்து இருக்கிறது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கு இடைக்கால தடை வாங்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version