தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி உண்டா? தேர்தல் ஆணையம்!

Published

on

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி உண்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கண்டிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்றும் ஆனால் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தகுந்தபடி எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக வாக்கு அளிக்க ஏதுவாக முழு கவச உடைகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, தெர்மல் ஸ்கேன் கருவிகளும் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படும் இந்த கவச உடைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அதன்பின் அவர்கள் வாக்களிக்க வரலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version