தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் குளறுபடி: 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை!

Published

on

தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து அந்த வாரியத்தின் தலைவர்களாக இருந்த ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது மற்றும் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்தே இந்த பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.ஆசிரியர் தேர்வுகள், மதிப்பீடு, நேர்முகத் தேர்வு, பணி நியமனம் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவில்லை என்றும் எனவே கடந்த 2011 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என்றும் தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version