இந்தியா

80% வருவாயை இழந்த மாநிலங்கள்.. ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலையில் அரசுகள்!

Published

on

ஊரடங்கால் மாநிலங்களின் வருவாய் 80 சதவீதம் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால் தான் மாநிலங்களின் வருவாய் சரிந்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே இன்று பிரதமர் மோடியுடன் முதல்வர்கள் கலந்துரையாடும் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் பலர் மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு கேட்க உள்ளனர்.

மத்திய அரசு கொரோனா நிவாரண நிதிக்கான நிதியை வழங்கவில்லை என்றால் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் சில மாநில அரசுகள் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version