இந்தியா

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

Published

on

நிலையான வட்டி வருமானத்தை பெறவும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் பிக்சட் டெபாசிட் என்ற முறையில் முதலீடு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு போல் இதில் ரிஸ்க் இல்லை என்பதும் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது இதில் தெரிந்து விடும் என்பதால் இதில் பலர் இன்னும் முதலீடு செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தற்போது இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி கொண்டே வருவதை அடுத்து பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கும் வட்டி உயர்ந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் ஒரு முக்கிய பிக்சட்டெபாசிட் முதல் திட்டத்தை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அம்ரித் கலாஷ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதும், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டது. இதில் பொது முதலீட்டாளர்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தில் “400 நாட்கள்” திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டி விகிதம் தரும். இந்நிலையில் இந்த திட்டம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கி, கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப அலையின் போது ஒரு சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 31ஆம் தேதியுடன் முடிக்கவுள்ளது.

இந்த திட்டத்தின் படி 5 ஆண்டிற்கு 5 கோடிக்கும் குறைவான தொகையை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 7 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவிகித வட்டியும் வழங்கி வந்தது.

இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் முன்பு அல்லது அதற்கு முன்னதாக மூடப்பட்டால், வட்டி விகிதம் ஒப்பந்த விகிதத்தை விட 1.00 சதவிகிதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version