இந்தியா

முடிவெட்டும்போது மீட்டிங் போட்ட ஸ்டார்ட் அப் சி.இ.ஓ.. நெட்டிசன்கள் கிண்டலுக்கு பதிலடி!

Published

on

பிரபல ஸ்டார்ட் நிறுவனத்தின் சிஇஓ சலூனில் முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது மீட்டிங் போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் அந்த கிண்டலுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்வாக்ட் மெட்டாவெர்சிட்டி என்ற நிறுவனத்தின் சிஇஓ தானேய் பிரதாப் என்பவர் சமீபத்தில் சலூனில் முடி வெட்டிக் கொண்டிருந்த போது முடி வெட்டும் நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காக தனது நிறுவனத்தின் ஊழியர்களுடன் மீட்டிங் போட்டார். அந்த மீட்டிங்கில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள சிஇஓ பிரதாப், நிறுவனத்தின் பணிகள் முக்கியம் என்றும் ஒரு சில நிமிடங்களில் கூட வீணாக்க கூடாது என்றும் அதனால்தான் முடி வெட்டும் நேரத்தில் மீட்டிங் போட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் நமது பணிகள் நிற்கக்கூடாது என்றும் அவர் பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கும் அவரது பதிவுக்கும் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். ஒருவர் முடி வெட்டும் போது தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு தூங்கும் நேரத்தை கூட நீங்கள் வீணாக்க வேண்டாம், தூங்கும் நேரத்தில் முடி வெட்டிக் கொள்ளலாம் என்று பதிவு செய்திருந்தார். இன்னும் ஏராளமானோர், ‘இது முட்டாள்தனமானது என்றும் அவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே வேண்டும் என்று இப்படி ஒரு செயலை செய்துள்ளார் என்றும் முடிவெட்டும் 15 நிமிடத்தில் அவர் என்ன பெரிய மீட்டிங் நடத்தி விடுவார் என்றும் பதிவு செய்தனர்.

மேலும் இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் அந்த செய்தியை மேற்கோள் காட்டி அவர் மீண்டும் ஒரு டுவிட் பதிவு செய்துள்ளார். அதில் என்னை கேலியும் கிண்டலும் செய்த அனைவருக்கும் நன்றி என்றும் ஆனால் இந்தியாவில் உள்ள கல்வித்தரம் உயரும் வரை நான் தொடர்ந்து கடினமாக வேலை செய்து கொண்டிருப்பேன் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

seithichurul

Trending

Exit mobile version