கிரிக்கெட்

IND vs AUS- முதல் டெஸ்டின் 2வது பந்திலேயே ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட ஸ்டார்க்! #Video

Published

on

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியுள்ளது.

பிங்க் நிற பந்து மூலம் இந்த டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்தப் பந்தில் அட்டகாசமாக பவுலிங் செய்யக் கூடியவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க். அவர் ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தை இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷாவுக்கு வீசினார்.

அந்தப் பந்து லேசான இன் ஸ்விங் ஆகி, ஷாவின் பேட்டில் இன்சைடு எட்ஜ் ஆனது. தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்புகளைப் பந்து பதம் பார்த்தது அந்தப் பந்து. ஆட்டத்தின் இரண்டாவது டெலிவரியிலேயே ஸ்டம்புகளை அலறவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணியினர் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர். ஷா, டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இன்னொரு ஓப்பனரான மயான் அகர்வாலும் நீண்ட திணறலுக்குப் பின்னர் 17 ரன்களுக்கு வெளியேறினார். அவரின் விக்கெட்டை பாட் கம்மினஸ் கைப்பற்றினார். தற்போது கேப்டன் விராட் கோலியும், செத்தேஷ்வர் புஜாராவும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

 

 

 

 

Trending

Exit mobile version