தமிழ்நாடு

கொரோனா நிவாரண நிதியாக ’ஸ்டார் இந்தியா’ கொடுத்த மிகப்பெரிய தொகை!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும், நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்துப் பொருட்களையும் நிதி உதவியும் செய்து வருகின்றன. அதேபோல் முன்னணி நிறுவனங்களும் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தொலைக்காட்சி உலகில் முன்னணியில் இருக்கும் ஸ்டார் டிவி நெட்வொர்க் தற்போது கொரோனா நிவாரண நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் எங்களது ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூபாய் 50 கோடி நிவாரண உதவியாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மருந்து பொருட்கள் வாங்கவும் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் இந்த தொகை உதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் என்றும் கூறியுள்ளது

ஏற்கனவே ஸ்டார் டிவி நெட்வொர்க் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் நிவாரன நிதியாக ரூபாய் 28 கோடி வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் டிவி நெட்வொர்க்கின் கீழ்தான் விஜய் டிவி உள்பட பல தொலைக்காட்சிகள் இயங்கி வருகின்றன என்பது தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version