இந்தியா

பின்னடைவை சந்தித்து வரும் ஸ்டார் வேட்பாளர்கள் விபரம்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் சிலர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்களாக கருதப்பட்ட சிலர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அவர்கள் விபரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி பின்னடைவை சந்தித்து வருகிறார். வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் பின்னடைவை சந்தித்து வருகிறார். தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பின்னடைவை சந்திக்கிறார்.

உத்தரகண்டில் ஹரொஷ் ராவத் பின்னடைவை சந்தித்து வருகிறார், டெல்லி முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் பின்னடைவை சந்தித்து வருகிறார். டெல்லி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் பின்னடைவை சந்தித்து வருகிறார். பீஹாரில் ஆர்ஜேடி கட்சியின் சரத் யாதவ் பின்னடைவை சந்தித்து வருகிறார். பிஹாரில் சிபிஐ வேட்பாளர் கன்னையா குமார் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

பிஹாரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சத்ருஹான் சின்ஹா பின்னடவை சந்தித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பின்னடைவை சந்திக்கிறார், பெங்களூரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜ் பின்னடவை சந்திக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Trending

Exit mobile version