வணிகம்

ஸ்டாலின் அமெரிக்க பயணம்: தமிழகத்திற்கு இதுவரை கிடைத்துள்ள முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும்!

Published

on

சென்னை: முதலவர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா மேற்கொண்ட முதலீட்டுப் பயணம் தமிழகத்திற்கு கணிசமான முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகி, இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ஒப்பந்தங்கள்:

  • நோக்கியா: சென்னை சிறுச்சேரியில் ரூ.450 கோடி முதலீட்டில் நோக்கியா ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5G, 6G தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  • பே பால்: சென்னை பே பால் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • மைக்ரோ சிப் நிறுவனம்: சென்னை செம்மஞ்சேரியில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோ சிப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.250 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த மையம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
  • அப்ளைட் மெடீரியல்ஸ்: சென்னை தரஅனியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க அப்ளைட் மெடீரியல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • ஓமியம்: ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  • கீக் மைண்ட்ஸ்: கீக் மைண்ட்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • யீல்டு இஞ்சினியரிங் சிஸ்டம்ஸ்: யீல்டு இஞ்சினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ரூ.150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மொத்தமாக, இந்த ஒப்பந்தங்கள் தமிழகத்திற்கு ரூ.1,750 கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

Tamilarasu

Trending

Exit mobile version