தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தும் ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசினார். அப்போது, முதல்வர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செல்கிறார். பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழகத்துக்கு முதலீடு கொண்டுவருவதற்காக அவர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். முதலீட்டோடு வந்தால் வாழ்த்தி வரவேற்கிறோம் என்றார்.

மேலும், தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது முதல்வரின் முதலீட்டை அதிகப்படுத்த வெளிநாடு செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version