தமிழ்நாடு

தமிழக முதல்வராக மே 7ஆம் தேதி பதவியேற்கிறாரா முக ஸ்டாலின்?

Published

on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 124 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க உள்ளது என்ற நிலையில் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக எப்போது பதவியேற்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதுஇந்தநிலையில் பதவியேற்பு விழா எப்போது என்பது குறித்து முக ஸ்டாலின் கூறியதாவது: வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெற்றிச் சான்றிதழ்களை பெற்ற பிறகு இன்று நாங்கள் முடிவு செய்து நாளை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, அந்தக் கூட்டத்தில் முறையாக தலைவரைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பிறகு அரசு அதிகாரிகளோடு கலந்துபேசி, எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வது என்பதை முடிவு செய்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, இப்போது கொரோனா காலம். கொரோனாவின் கொடுமை எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பதவிப்பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பரமாக – விழாவாக நடத்தாமல் எவ்வளவு எளிமையாக நடத்த முடியுமோ, குறிப்பாக, ஆளுநர் மாளிகையிலேயே அதை நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அது எந்தத் தேதி என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக மிக எளிமையாக பதவி ஏற்பார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version