தமிழ்நாடு

நாளை மறுநாள் தேர்தல் முடிவு: முக ஸ்டாலினின் பொறுப்பான அறிக்கை!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை மறுநாள் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்

பெருந்தொற்றின் சூழலின் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகி விட வேண்டாம் என்றும் திமுகவினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சி தோழர்களுக்கும் இது என் அன்பு வேண்டுகோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெற்றியை விட அனைவரின் உயிர் முக்கியம் என்றும் வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கழகத்தினர் ஆவலுடன் காத்திருப்பது அறிவேன். திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என்ற உற்சாகமான தகவல்கள் கருத்துக்கணிப்புகள் வழியாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் பெருந்தொற்றால் தள்ளாடுகிறது. படுக்கைகளில் உயிர் வாயு கிடைக்காமல் நோயாளிகள் அவதி படுவதை பார்த்து பதபதைக்கிறது.

இந்த சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தும் முடிவுகள் வர வர வெற்றியை கொண்டாடியும் பெருந்தொற்றுக்கு ஆளாகிட வேண்டாம். இல்லங்களிலேயே முடிவை தெரிந்து வெற்றியைக் கொண்டாடுவது தான் பொருத்தம் வெற்றியை கொண்டாடுவதை விட உடன்பிறப்புகளின் உயிரைப் பாதுகாப்பது என் தலையாய நோக்கம். மாற்றுக் கட்சியினர்களுக்கும் இது என்னுடைய அன்பு வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார். மு க ஸ்டாலினின் இந்த பொறுப்பான அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது

 

 

 

Trending

Exit mobile version