தமிழ்நாடு
திமுகவின் தலைவராகிறாரா மு.க.ஸ்டாலின்?.. அதிரடி மாற்றங்கள்!
சென்னை: திமுகவின் தலைவராக, ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை மரணம் அடைந்தார். அவரது உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திமுகவில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று நடக்க உள்ளது. ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டம் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டம் ஆகும். இதற்கு பின் விரைவில் இன்னொரு கூட்டம் நடக்கும்,
அதில், தலைவர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் இருந்து தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.