தமிழ்நாடு

தீர்ப்பு வரும்போது அதிமுக ஆட்சி தானாகவே கவிழும்: ஸ்டாலின் விளாசல்!

Published

on

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை தகுதி நீக்கம் செய்யாமல் உள்ளார் சபாநாயகர் தனபால். அவர்கள் பதவியில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தால் ஆட்சி கவிழக்கூடிய சூழல் ஏற்படும்.

இந்நிலையில் இதுகுறித்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஓபிஎஸ் உட்பட 11 பேர், அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் வாக்களித்தவர்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது.

இந்த தீர்ப்பு வரும்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கப் போவதில்லை. இதைச் சொன்னால் ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று பழனிசாமி சொல்லுவார். அதிமுக ஆட்சி கவிழும் என்ற கனவெல்லாம் காண வேண்டிய அவசியம் கிடையாது. தீர்ப்பு வரும்போது அது தானாகவே கவிழும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version