தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின்!

Published

on

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சி தமிழகத்தை ஆட்சி செய்யப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதற்கு முன்னரும் உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் ஆகிய பதவிகளில் இருந்த முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்றும் அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மாற்று கட்சி எம்எல்ஏக்களும் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த அழைப்பை ஏற்று அனைத்து எம்எல்ஏக்களும் இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய நிலையில் சற்று முன்னர் ஸ்டாலின் அவர்களை சட்டமன்ற திமுக எம்எல்ஏக்கள் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். இதனை அடுத்து நாளை ஆட்சி அமைக்க ஸ்டாலின் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version