செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – ஸ்டாலின் டிவிட்…

Published

on

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக அரசு எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டத்தில் சிலர் இறந்தும் போனார்கள். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் மழையிலும், வெயிலிலும், குளிரும் போராட்டி வந்த நிலையில் இந்த 3 வேளாண் சட்டங்களும் இன்று முதல் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இன்று நாட்டுமக்களிடையே உரையாடிய போது அவர் இந்த அறிவிப்பை வெளிட்டார்.

formers

ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் அடுத்த வருடம் உத்தரபிதேசாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த செய்தி இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!’ என பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version